/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.டி.சி.,யில் நினைவு போட்டி; பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்
/
எஸ்.டி.சி.,யில் நினைவு போட்டி; பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்
எஸ்.டி.சி.,யில் நினைவு போட்டி; பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்
எஸ்.டி.சி.,யில் நினைவு போட்டி; பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்
ADDED : ஜூலை 21, 2025 09:46 PM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியின் விளையாட்டுத்துறை சார்பில், 8வது மாவட்ட அளவிலான எஸ்.டி.சி., நிறுவனர்கள் நினைவு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், பொள்ளாச்சி, உடுமலையை சேர்ந்த, 30 பள்ளிகள் பங்கேற்றன. கல்லுாரி துணை தலைவர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.
மாணவர்கள் பிரிவு கூடைப்பந்து போட்டியில் விஷ்வதீப்தி பள்ளி முதலிடமும், எல்.எம்.எஸ்., பள்ளி இரண்டாமிடமும்; உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும், பி.கே.டி., பள்ளி நான்காமிடமும் பெற்றன.
வாலிபால் போட்டியில், என்.ஜி.என்.ஜி., பள்ளி முதலிடமும், உடுக்கம்பாளையம் பள்ளி இரண்டாமிடமும், செஞ்சேரி மலையாண்டிப்பட்டணம் பள்ளி மூன்றாமிடமும், பி.கே.டி., பள்ளி நான்காமிடமும் பெற்றன.
பூப்பந்து போட்டியில், ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா பள்ளி முதலிடமும், என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், விஷ்வதீப்தி பள்ளி மூன்றாமிடமும், கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு பள்ளி நான்காமிடமும் பெற்றன.
* மாணவியர் பிரிவு கோகோ போட்டியில், மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், ஆச்சிப்பட்டி பி.வி.என்., பள்ளி மூன்றாமிடமும், திவான்சாபுதுார் அரசு பள்ளி நான்காமிடமும் பெற்றன.
பூப்பந்து போட்டியில், உடுமலை விசாலாட்சி பள்ளி முதலிடமும், என்.ஜி.என்.ஜி., பள்ளி இரண்டாமிமும், மாரியம்மாள் பள்ளி, மூன்றாமிடமும், ஜல்லிபட்டி அரசு பள்ளி நான்காமிடமும் பெற்றன.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், கல்லுாரி தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். கோவை பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை இயக்குனர் (பொ) அண்ணாத்துரை வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் தர்மலிங்கம், சசிதரன், முரளி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர் பாரதி தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர்.