/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெமு ரயில் பொள்ளாச்சி வழியாக இயக்கம்
/
மெமு ரயில் பொள்ளாச்சி வழியாக இயக்கம்
ADDED : அக் 29, 2024 09:27 PM
பொள்ளாச்சி: கோவையில் இருந்து, பொள்ளாச்சி வழியாக திண்டுக்கலுக்கு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க, தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.அதில், கோவை - திண்டுக்கல் மெமு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
கோவையில் இருந்து, மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு முன்பதிவில்லா ரயில் (06106), இன்று காலை, 9:35 மணிக்கு கிளம்பி, 9:48 மணிக்கு போத்தனுார் சென்று, 9:50 மணிக்கு கிளம்புகிறது. காலை, 10:13 மணிக்கு கிணத்துக்கடவுக்கு வருகிறது.அங்கு இருந்து, காலை, 10:14 மணிக்கு கிளம்பி, பொள்ளாச்சிக்கு 11:08 மணிக்கு வந்து, 11:10 மணிக்கு கிளம்புகிறது.
உடுமலைக்கு, 11:33 மணிக்கு சென்று, அங்கு இருந்து, 11:34 மணிக்கு கிளம்பி, பழநிக்கு மதியம், 12:05 மணிக்கு சென்று, 12:10 மணிக்கு புறப்படுகிறது.ஒட்டன்சத்திரத்தில் இருந்து மதியம், 12:35 மணிக்கு கிளம்பி, 12:36 மணிக்கு புறப்படுகிறது. மதியம், 1:10 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது.
அங்கு இருந்து, ரயில் (06107) மதியம், 2:00 மணிக்கு புறப்படுகிறது. 2:27 மணிக்கு ஒட்டன்சத்திரம் சென்று, 2:28 மணிக்கு கிளம்பி, பழநிக்கு, 2:55 மணிக்கு சென்று, மாலை, 3:00 மணிக்கு புறப்படுகிறது.
உடுமலைக்கு மாலை, 3:35 மணிக்கு சென்று, 3:36 மணிக்கு புறப்படுகிறது. மாலை, 4:18 மணிக்கு பொள்ளாச்சிக்கு சென்று, மாலை, 4:20 மணிக்கு கிளம்புகிறது. கிணத்துக்கடவுக்கு மாலை,4:43மணிக்கு சென்று, 4:44 மணிக்கு கிளம்புகிறது. போத்தனுாருக்கு, 5:08 மணிக்கு சென்றடைந்து, 5:10 புறப்பட்டு, மாலை, 5:50 மணிக்கு கோவை செல்கிறது.
இந்த ரயில், இன்று, 30ம் தேதி முதல், நவ.,6ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இதை பயணியர் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென, தெற்கு ரயில்வே நிர்வாகம்தெரிவித்துள்ளது.

