/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை: வரும், 2ல் முகாம் நடக்கிறது
/
ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை: வரும், 2ல் முகாம் நடக்கிறது
ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை: வரும், 2ல் முகாம் நடக்கிறது
ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை: வரும், 2ல் முகாம் நடக்கிறது
ADDED : நவ 28, 2025 03:34 AM
பொள்ளாச்சி: 'பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் வரும், 2ம் தேதி நடக்கிறது,' என, மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் கவுரி தெரிவித்தார்.
கோவை மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் கவுரி அறிக்கை:
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில், வரும், 2ம் தேதி ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இச்சிகிச்சை, 15 நிமிடத்தில் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களை கொண்டு இலவசமாக செய்யப்பட உள்ளது.
கத்தியின்றி, ரத்தமின்றி எவ்வித பக்கவிளைவுகளுமின்றி செய்யப்படும் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக, 1,100 ரூபாயும், கோவை மாவட்ட கலெக்டர் வழங்கும் ஊக்கத்தொகையாக, 1,000 ரூபாய், ரோட்டரி கிளப் பொள்ளாச்சி சார்பில், 1,000 ரூபாய் என மொத்தம், 3,100 ரூபாய் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இச்சிகிச்சையினை ஏற்பதால் இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கோ, கடின உழைப்புக்கோ தடையேதுமில்லை. பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவை சிகிச்சையை விட பன்மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை.
பக்கவிளைவுகள் இல்லாத இச்சிகிச்சை முறையினை ஏற்று பொதுமக்கள் பயன்பெற வேண்டும். இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தொலைபேசி எண், 80728 65541, 97655 94122, 95977 30813 என்ற எண்களை தொடர்பு கொண்டு விபரம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக் கப்பட்டுள்ளது.

