/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவண்ணாமலை தீப தரிசனம்: 15 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
திருவண்ணாமலை தீப தரிசனம்: 15 சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருவண்ணாமலை தீப தரிசனம்: 15 சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருவண்ணாமலை தீப தரிசனம்: 15 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : நவ 28, 2025 03:34 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து முக்கிய திருவிழா நாட்களில் பழநி, திருமூர்த்திமலை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அவ்வகையில், கார்த்திகை தீபத்திருவிழா, டிச., 3ம் தேதி, திருவண்ணாமலையில்கோலாகலமாக நடக்கிறது. தீப தரிசனத்தை காண, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்கின்றனர். பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்களும், திருவண்ணாமலை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதால், அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'டிச., 3ம் தேதி கூட்டத்திற்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும். அதேநேரம், திருவண்ணாமலையில் 4ம் தேதி கிரிவலம் நிகழ்ச்சி என்பதால், அன்றைய தினம் காலை முதல் அனைத்து சிறப்பு பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவண்ணாமலையில் இருந்து பொள்ளாச்சிக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது,'என்றனர்.

