/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி; சி.ஐ.டி., கல்லுாரியில் அசத்தும் வீரர்கள்
/
ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி; சி.ஐ.டி., கல்லுாரியில் அசத்தும் வீரர்கள்
ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி; சி.ஐ.டி., கல்லுாரியில் அசத்தும் வீரர்கள்
ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி; சி.ஐ.டி., கல்லுாரியில் அசத்தும் வீரர்கள்
ADDED : அக் 01, 2024 11:31 PM

கோவை : சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்துவரும் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், அசத்தலான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவிநாசி ரோடு, கோயம்புத்துார் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி(சி.ஐ.டி.,) மைதானத்தில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே(9வது மண்டலம்) பால்பேட்மின்டன், கூடைப்பந்து, டென்னிஸ் போட்டி நடக்கிறது.
நேற்று ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் துவங்கின.
இதில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 12 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகளை, கல்லுாரி நிர்வாக அலுவலர் ஜேக்கப், முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முதல் போட்டியில், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி அணியும், பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணியும் மோதின.
இதில், 37-26 என்ற புள்ளி கணக்கில் பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணி, கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது. தொடர்ந்து, டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி அணி, 29-18 என்ற புள்ளி கணக்கில், பார்க் கல்லுாரி அணியை வென்றது.
ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, 40-20 என்ற புள்ளி கணக்கில் ஜேன்சன் தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது.
பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணி, 29-3 என்ற புள்ளி கணக்கில், தமிழ்நாடு இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது.
தொடர்ந்து, போட்டிகள் நடந்துவருகின்றன. பால்பேட்மின்டன், டென்னிஸ் போட்டிகள் இன்று துவங்குகின்றன.