ADDED : நவ 20, 2024 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; நெகமம் அருகே உள்ள சின்னேரிபாளையம் சுவஸ்திக் மெட்ரி பள்ளியில், சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளித் தாளாளர் தீபாகாந்தி தலைமை வகித்தார். ஆசிரியர் யசோதாதேவி, ஆண்கள் தினத்தை உருவாக்கிய ஜெரோம் டீலக்ஸ், சமூகத்தில் ஆண்களின் கொடை, வீரம், உழைப்பு, சமூகப் பொறுப்பு மற்றும் தியாக உணர்வு குறித்து விளக்கிப் பேசினார்.
மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியர் ரேணுகாதேவி செய்திருந்தார்.

