/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனத்திறன் தேர்வு கடினம் படிப்பறிவுத் திறன் தேர்வு எளிது
/
மனத்திறன் தேர்வு கடினம் படிப்பறிவுத் திறன் தேர்வு எளிது
மனத்திறன் தேர்வு கடினம் படிப்பறிவுத் திறன் தேர்வு எளிது
மனத்திறன் தேர்வு கடினம் படிப்பறிவுத் திறன் தேர்வு எளிது
ADDED : பிப் 05, 2024 12:58 AM

அன்னுார்;'மனத்திறன் தேர்வு கடினமாக இருந்தது' என, தேசிய வருவாய் வழி தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில், தேர்வு செய்யப்படுவோருக்கு, நான்கு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்கான தேர்வு, அன்னுார் அமரர் முத்துக் கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. அன்னுார், அ.மேட்டுப்பாளையம், பசூர், சொக்கம்பாளையம், ஆணையூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் நேற்று முன் தினம் தேர்வு எழுதினர்.
காலை 9:30 மணிக்கு துவங்கி 11:00 மணி வரை மனத்திறன் தேர்வு நடந்தது. 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் தரப்பட்டிருந்தன.
11:30 மணி முதல் ஒரு மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வு நடந்தது. இதிலும் 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
ரகுராம், நடுப்புதுார், அன்னுார்: மனத்திறன் தேர்வில், 90 வினாக்களில் 50 வினாக்களுக்கு மேல் மிகவும் கடினமாக இருந்தது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது கடினம்.
கதிரேசன், அ.மேட்டுப்பாளையம், அன்னுார்: படிப்பறிவு திறன் தேர்வில், 90 மதிப்பெண்களில் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். மிகவும் எளிதாக இருந்தது. எட்டாம் வகுப்பு புத்தகங்களில் இருந்து வினாக்கள் வந்திருந்தன.
பிரவீன், ருத்ரியம் பாளையம், அன்னுார்: மனத்திறன் பகுதியில் பல வினாக்கள் புரியாதவைகளாக இருந்தன. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கேட்க வேண்டிய கேள்விகள் இதில் கேட்கப்பட்டுள்ளன. தேர்வு குறித்து பயிற்சி இல்லாததால் கடினமாக இருந்தது. அதிக மதிப்பெண் பெற முடியாது.

