ADDED : பிப் 08, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, - கோவை அரசு கலை கல்லுாரியில், மென்திறன் மேம்பாட்டு மையம் சார்பில், வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. புளியகுளம் அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் வீரமணி தலைமை வகித்து நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
அரசு போட்டித்தேர்வுகளில் உள்ள வாய்ப்புகள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் பயிற்சிகள், துறை ரீதியான வேலைவாய்ப்புகள், நேர்காணல் எதிர்கொள்ளும் யுத்திகள், உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கல்லுாரி முதல்வர் உலகி, அரசியல் அறிவியல் துறைத்தலைவர் கனகராஜ், மைய ஒருங்கிணைப்பாளர்கள் ரஞ்சனி, செல்வராணி உட்பட பலர் பங்கேற்றனர்.

