/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருணை அடிப்படை பணி நியமனங்கள்; கல்வித் துறையில் தொடரும் தாமதம்
/
கருணை அடிப்படை பணி நியமனங்கள்; கல்வித் துறையில் தொடரும் தாமதம்
கருணை அடிப்படை பணி நியமனங்கள்; கல்வித் துறையில் தொடரும் தாமதம்
கருணை அடிப்படை பணி நியமனங்கள்; கல்வித் துறையில் தொடரும் தாமதம்
ADDED : ஆக 03, 2025 09:37 PM
கோவை; பள்ளிக்கல்வித் துறையில், பணிக்காலத்தில் உயிரிழந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள், மாவட்ட அளவிலும், துறை வாரியாகவும் சீனியாரிட்டி பட்டியலின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. உயிரிழந்தவர்களின் வாரிசுகள் 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து அரசு துறைகளிலும் காலியிடங்களுக்கு ஏற்ப இவ்வகை நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான துறைகளில் குறித்த காலத்திற்குள் நியமனங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கல்விதுறையில் இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
பள்ளிக்கல்வித் துறையில் 1972ம் ஆண்டு முதல் கருணை அடிப்படையிலான பணி நியமனத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களில் 2021 முதல் 2024 வரையில் 650 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், கோவை மாவட்டத்தில்கடந்த 2016ம் ஆண்டு முதல் 40க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறபட்ட நிலையில், பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், “முன்பு, கருணை அடிப்படையிலான நியமனங்கள் மொத்த காலிப்பணியிடங்களில் 25 சதவீதமாக இருந்தது.
தற்போது இது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். 2016 ஜூன் மாதத்திற்குபிறகு எந்தவொரு பணியிடமும் நிரப்பப்படவில்லை. தற்போது 2024-25 விவரங்கள்சேகரிக்கப்பட்டு வருகின்றன.மாநில அளவில் முன்னுரிமைபட்டியலின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன” என்றார்.