/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிநவீன வசதிகளுடன் மெர்லிஸ் ஓட்டல் துவக்கம்
/
அதிநவீன வசதிகளுடன் மெர்லிஸ் ஓட்டல் துவக்கம்
ADDED : ஜூலை 15, 2025 08:51 PM

கோவை; ராஜ் பார்க் ஓட்டல்ஸ் சார்பில், 'மெர்லிஸ்' ஓட்டல், கோவை அவிநாசி ரோட்டில் துவக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தின் அருகில், 142 ஆடம்பர அறைகளுடன் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ளது இந்த ஓட்டல். நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் சந்தீப் தேவராஜ், இயக்குனர் திவ்யா மற்றும் பொது மேலாளர் மதுசூதனன் ஆகியோர் கூறியதாவது:
பல்வேறு அதி நவீன சொகுசு வசதிகளுடன் அறைகள் மற்றும் பிரத்யேக சூட் அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குடும்ப விழாக்கள், நிறுவனங்களின் பெரிய மற்றும் சிறிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக, 50லிருந்து 1,600 பேர் அமரக்கூடிய வகையில், பத்து வகையான ஹால்கள் உள்ளன.
உயர் தர வசதிகளுடன் ஐந்து வகையான உணவகங்களில், உலகளாவிய சிக்னேச்சர் உணவு பரிமாறப்படும். ஒரே நேரத்தில்,400க்கு மேற்பட்ட கார்கள் நிறுத்துவதற்கென, கீழ் மற்றும் தரைத்தளங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உயர் தர மது கூடம், நவீன உடற்பயிற்சி மையம், நீச்சல் குளம், கருத்தரங்க கூடம் போன்ற வசதிகளும் உள்ளன.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.