வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீத்தேன் ஒப்பந்தம் / மீத்தேன் ஒப்பந்தம்
/
கோயம்புத்தூர்
மீத்தேன் ஒப்பந்தம்
ADDED : ஏப் 07, 2024 12:18 AM
தஞ்சாவூர் திலகர் திடலில், நேற்று மாலை அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., வேட்பாளர் சிவநேசனுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:விவசாயிகளுக்கு எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க., அரசு வழங்கவில்லை.தி.மு.க., ஆட்சியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வந்து இந்த டெல்டாவை அழிக்க பார்த்தனர். அதிலிருந்து நாம் தான் காப்பாற்றினோம். முப்போகம் விளையக்கூடிய இந்த பூமியை தி.மு.க.,வினர் அழிக்க பார்த்தனர். அதிலிருந்து காப்பாற்றினோம். விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து, அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பல திட்டங்களை கொண்டு வந்ததை தடுத்து பாதுகாத்தோம். இப்படிப்பட்ட தி.மு.க.வுக்கு தேர்தலில் மரண அடி கொடுக்க வேண்டும். இந்த பசுமையான பூமியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் பேசி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதனை சட்ட பூர்வமாக்கினோம்.இவ்வாறு அவர் பேசினார்.பழனிசாமி பேசியபோது, மீத்தேன் திட்டத்தை ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது ஒப்பந்தம் போட்ட போட்டோவை காட்டினார். பின், எம்.பி., - டி.ஆர்.பாலு பேட்டி ஒன்றில், 'எம்.பி., பழனிமாணிக்கமும், நானும் தான் திட்டத்தை கொண்டு வந்தோம்' என்று கூறும் ஒரு வீடியோவையும், 'மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது ஸ்டாலின் தான்' என, வைகோ பேசும் மற்றொரு வீடியோவையும் ஒளிபரப்பி காட்டினார்.