/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மெட்ரோ' ரயில் வழித்தடம்: துாண் உயரத்தில் சிறு மாற்றம்
/
'மெட்ரோ' ரயில் வழித்தடம்: துாண் உயரத்தில் சிறு மாற்றம்
'மெட்ரோ' ரயில் வழித்தடம்: துாண் உயரத்தில் சிறு மாற்றம்
'மெட்ரோ' ரயில் வழித்தடம்: துாண் உயரத்தில் சிறு மாற்றம்
ADDED : ஆக 23, 2025 11:40 AM
கோவை: கோவையில் அவிநாசி ரோடு, சத்தி ரோடு என இரு வழித்தடங்களில், 34.8 கி.மீ., நீளத்துக்கு 'மெட்ரோ' ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
முதல் வழித்தடம் உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து, விமான நிலையம் வழியாக நீலாம்பூர் வரை 20.4 கி.மீ ., நீளத்துக்கு அமையும். 2வது வழித்தடம், ரயில் நிலையம் முதல் சத்தியமங்கலம் சாலையில், வலியம்பாளையம் பிரிவு வரை 14.4 கி.மீ., நீளத்துக்கு அமைய உள்ளது.
லீ மெரிடியன் ஓட்டல் மற்றும் செட்டிபாளையம் சா லையில், 'மெட்ரோ' பணிமனை அமைய உள்ள இடத்தில் இருந்து, விமான நிலையத்துக்கு வரும் வழித்தடத்தில் அமையும் துாண்களின் உயரம் தொடர்பாக, விமானப் போக்குவரத்து ஆணையத்திடம், 'மெட்ரோ' நிர்வாகம் தடையின்மைச் சான்று கோரியது.
ஏற்கன வே திட்டமிட்ட துாண்களின் உயரம், விமானப் போக்குவரத்து ஆணைய விதிமு றையை விட கூடுதல் உயரத்துடன் இருந்ததால், அவற்றின் உயரத்தைக் குறைக்கவோ அல்லது சுரங்க வழித்தடம் அமைக்கவோ வேண்டும் என்ற சூழல் உருவானது. தற்போது துாண்களின் உயரத்தில் மாற்றம் செய்து, மாற்றுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
'மெட்ரோ' நிர்வாக தரப்பில் கூறுகையில், 'விமானப் போக்குவரத்து ஆணைய விதிமுறைக்கு ஏற்ப, துாண்களின் உயரத்தில் மாறுதல் செய்து, மாற்றுத் திட்டம் வடிவமைத்து விட்டோம். சுரங்க வழித் தடம் அமைக்கும் தேவை, தற்போதைக்கு இல்லை' என்றனர்.