sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் செப்.,1 வரை நீட்டிப்பு

/

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் செப்.,1 வரை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் செப்.,1 வரை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் செப்.,1 வரை நீட்டிப்பு


ADDED : ஜூலை 02, 2025 08:34 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை செப்., 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே, வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் (06030) சிறப்பு ரயில், ஞாயிறு இரவு, 7:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை, 7:30 மணிக்கு, மேட்டுப்பாளையம் வந்தடையும்.

அதேபோல், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி (06029) சிறப்பு ரயில், திங்கள் இரவு, 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை, 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

சிறப்பு ரயிலில் ஏ.சி., இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். சிறப்பு ரயில் சேரன் மாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார், கோவை ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

மதுரை, பழனி, தென்காசி, குற்றாலம், திருவில்லிபுத்துார், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள வழிபாட்டு, சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோருக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்த சிறப்பு ரயில், ஏப்., 2022 முதல் தற்போது வரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இச்சிறப்பு ரயிலின் இயக்கம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இதையடுத்து, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில், 6ம் தேதி முதல் ஆக., 31 வரையிலும், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில், 7ம் தேதி முதல் செப்., 1 வரை நீட்டித்து, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us