/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
ADDED : ஜன 18, 2024 12:30 AM

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 107-வது பிறந்தநாள் விழா பொள்ளாச்சியில் கொண்டாடப்பட்டது. எம்.எல்.ஏ., அலுவலகம், நகர அ.தி.மு.க., சார்பில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., திருவுருவ படத்துக்கு, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாசலம், ஒன்றியச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சூளேஸ்வரன்பட்டியிலும் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் இளஞ்செழியன், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிச் செயலாளர் நரிமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அம்பராம்பாளையம் ஊராட்சி கெட்டிமல்லன்புதுாரில், ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாபில் எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு அ.தி.மு.க., சார்பில் மலர் துாவி மரியாதை செய்யப்பட்டது. கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், பேரூராட்சி செயலாளர் மூர்த்தி, மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை
வால்பாறை புதுமார்க்கெட் அ.தி.மு.க., தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த விழாவில், ஏ.டி.பி., மாநிலத்தலைவர் அமீது கலந்து கொண்டு, எம்.ஜி.ஆர்., படத்துக்கு மாலை அணிவித்தார். விழாவில், மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன், மாவட்ட பேரவை இணை செயலாளர் நரசப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வால்பாறை நகர அ.தி.மு.க.,சார்பில் நடந்த விழாவில், ரொட்டிக்கடையில் உள்ள எம்.ஜி.ஆர்.,சிலைக்கு, நகர செயலாளர் மயில்கணேஷ் மாலை அணிவித்தார். நகர துணை செயலாளர் பொன்கணேஷ், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் பெருமாள், வர்த்தக அணி நகர செயலாளர் சண்முகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை
உடுமலை அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த விழாவில், எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் தலைமையில், அ.தி.மு.க., வினர் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஜல்லிபட்டி ஊராட்சி சந்தனகருப்பனுாரில், அ.தி.மு.க., நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச்செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில், செயலாளர் எம்.எல்.ஏ., மகேந்திரன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மடத்துக்குளம் துங்காவியில் நடந்த நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் காளீஸ்வரன் தலைமை வகித்தார்.
அ.ம.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மாநில துணைச்செயலாளர் சண்முகவேல் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
-- நிருபர் குழு -