/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள்; அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள்; அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
ADDED : டிச 25, 2024 10:17 PM
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு அ.தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சி கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு கோவை வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் அருண்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இது தவிர, சின்னதடாகம், கணுவாய், உருமாண்டம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், கோவனூர், பெரியநாயக்கன்பாளையம், பிரஸ் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய சந்திப்புகளில் எம்.ஜி.ஆர்., உருவ படங்கள் வைக்கப்பட்டு, அந்தந்த பகுதி அ.தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.