/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாள் விழா அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
/
எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாள் விழா அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாள் விழா அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாள் விழா அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
ADDED : ஜன 18, 2026 05:29 AM

கோவை: அ.தி.மு.க., நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது.
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன் தலைமையில் நடந்த விழாவில், எம்.எல்.ஏ., ஜெயராம், முன்னாள் மேயர்செ.ம.வேலுச்சாமி உள்ளிட்டோர் அ.தி.மு.க. தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து பேரணியாக அண்ணாசிலை சிக்னல் வரை சென்று, அங்குள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அண்ணாதுரை, ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதய தெய்வம் மாளிகையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு, தொண்டர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, 'தமிழகத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும்' என, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொண்டர்கள் தங்களது இல்லங்கள் முன்புஎம்.ஜி.ஆரின் புகைப்படம் வைத்து மரியாதை செலுத்தினர். வார்டுகளில் உள்ள அ.தி.மு.க., அலுவலகங்கள்உள்ளிட்ட இடங்களிலும், அன்னதானம் வழங்கப்பட்டது.

