/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
ADDED : ஜன 20, 2025 11:04 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கிணத்துக்கடவு, எம்.எல்.ஏ., தாமோதரன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ., பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் பல்வேறு ஊழல் நடந்து வருகிறது. ஆட்சிக்கு வரும் போது பொய்யான மற்றும் நிறைவேற்ற முடியாத அறிக்கையை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தார்கள். இதில், 'நீட்' தேர்வு ரத்து,மின்சாரம் மாதம் ஒரு முறை கணக்கீடு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல்உள்ளது.
இதுமட்டுமின்றி, மின் பயன்பாட்டு கட்டணம், பத்திர பதிவு கட்டணம், சொத்து வரி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை என எல்லாமே உயர்ந்துள்ளது. பள்ளி, கல்லூரி வாசலில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இளைய சமுதாயத்தினர் வாழ்க்கை பாதிப்பதுடன், தவறான பாதையில் செல்ல வழிவகுக்கிறது. பாலியல் சீண்டல்களால், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
கல்குவாரிகளில் இருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும், 'பர்மிட்' இன்றியும் கனிமவளத்தை கொள்ளையடிக்கின்றனர். இதில், ஊழலும், பல்வேறு விதிமீறலும் நடக்கிறது. இதை செய்வதும், ஆதரிப்பதும் தி.மு.க., வினரே.இதே ஆட்சி தொடர்ந்தால் மக்கள் நிலைஇன்னும் மோசமாகி விடும்.
இவ்வாறு, பேசினார்.

