/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாட்டம்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : ஜன 19, 2026 05:43 AM

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பகுதி வடவன்றூர். இங்குள்ள எம்.ஜி.ஆர்., நினைவகத்தில், எம்.ஜி.ஆர்., 109-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆரின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கேரள மாநில காங்கிரஸ் பொது செயலாளர் துளசி, எம்.ஜி.ஆரின் குடும்ப உறுப்பினர்களான தீபா, பிரதீப் மற்றும் அஸ்வின் நாயர் ஆகியோர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் ஷியாம் பிரசாத், மகேஷ், அருண், ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக அன்னதானமும் வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆரின் அழியாத பாரம்பரியத்திற்கும், சமூக சேவைக்கும் ஆற்றிய பங்களிப்பிற்கும் இந்த நிகழ்வின் வாயிலாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

