/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மியா' தனிஷ்க் நிறுவனத்தின் மூன்று புதிய கடைகள் திறப்பு
/
'மியா' தனிஷ்க் நிறுவனத்தின் மூன்று புதிய கடைகள் திறப்பு
'மியா' தனிஷ்க் நிறுவனத்தின் மூன்று புதிய கடைகள் திறப்பு
'மியா' தனிஷ்க் நிறுவனத்தின் மூன்று புதிய கடைகள் திறப்பு
ADDED : மார் 18, 2025 05:56 AM

கோவை : கோவையில் மூன்று புதிய கடைகளை, மியா தனிஷ்க் நிறுவனம் திறந்துள்ளது.
மியா பை தனிஷ்க் நிறுவனத்தின், வர்த்தக தலைவர் மிருணாள் மாஜி கூறியதாவது:
கோவை நகரில் எங்கள் நிறுவனம், தனது சில்லறை விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்தி வருகிறது. அதன்படி, மியா தனிஷ்க் தற்போது மாநிலம் முழுவதும், கடைகளின் எண்ணிக்கையை, 30 ஆக உயர்த்தியுள்ளது. நவீன மற்றும் 'ஸ்டைலிஷ்' நகைகளுக்கான முக்கிய இலக்காக மியா தனிஷ்க் இருக்கும்.
சில்லறை விற்பனை உத்தியில், ஒரு முக்கிய மைல்கல்லாக, ஆர்.எஸ்.புரம் (1,800 சதுரடி), திருச்சி ரோடு(1,200 சதுரடி) மற்றும் கிராஸ்கட் ரோடு(500 சதுரடி) என, மூன்று முக்கிய இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
புதிய கடைகளின் துவக்கத்தை கொண்டாடும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமைப்புகளில், 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.2,000 முதல் தவணையில் தொடங்குகின்ற, எங்கள் கோல்டன் ஹார்வெஸ்ட் திட்டத்தில், முதலீடு செய்யலாம். எந்த மியா தனிஷ்க் கடையிலும் அற்புதமான நகைகளை வாங்குவதற்கு, மாதாந்திர முதலீட்டு மதிப்பில், 75 சதவீதம் வரை பிரத்யேக தள்ளுபடி பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.