/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொடிசியா எதிரே பேக்கரியில் துள்ளி விளையாடிய எலிகள்!
/
கொடிசியா எதிரே பேக்கரியில் துள்ளி விளையாடிய எலிகள்!
கொடிசியா எதிரே பேக்கரியில் துள்ளி விளையாடிய எலிகள்!
கொடிசியா எதிரே பேக்கரியில் துள்ளி விளையாடிய எலிகள்!
ADDED : பிப் 17, 2025 11:19 PM
கோவை; கோவை கொடிசியா வர்த்தக வளாகத்திற்கு எதிர்புறம் செயல்படும் சதுரகிரி பேக்கரியில், உணவு தயாரிப்பு மற்றும் பொருட்கள் வைக்கப்படும் இடங்களில், எலிகள் ஓடுவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆய்வு மேற்கொண்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த, 16ம் தேதி இந்த பேக்கரிக்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், தின்பண்டங்களுக்கு நடுவே எலிகள் ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மொபைல் வீடியோ பதிவுடன், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக சதுரகிரி பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுகளின் போது, புகார் உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு சான்றிதழ் நகல், பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டப்படவில்லை.
பூச்சிக்கட்டுப்பாடு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை, பாதுகாப்பு கையுறை அணியவில்லை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, பேக்கரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் கூறுகையில், ''சதுரகிரி பேக்கரியில், தற்காலிகமாக வியாபாரத்தை நிறுத்தி, பூச்சிக்கட்டுப்பாடு செயல்பாடுகளை மேற்கொள்ள, இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
''புகார்களுக்கு உரிய விளக்கம் அளிப்பதோடு, அதனை சரிசெய்து எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும். தவறினால், பிரிவு 55ன் படி நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.