/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ-குறுமைய கபடியில் எதிரணியை 'தட்டி துாக்கிய' மைக்கேல்ஸ் அணி
/
அ-குறுமைய கபடியில் எதிரணியை 'தட்டி துாக்கிய' மைக்கேல்ஸ் அணி
அ-குறுமைய கபடியில் எதிரணியை 'தட்டி துாக்கிய' மைக்கேல்ஸ் அணி
அ-குறுமைய கபடியில் எதிரணியை 'தட்டி துாக்கிய' மைக்கேல்ஸ் அணி
ADDED : ஆக 08, 2025 08:42 PM
கோவை; பள்ளி கல்வித்துறை சார்பில் அ-குறுமைய விளையாட்டு போட்டிகள் பாரதியார் பல்கலையில் நடந்தன.
தேவாங்க பள்ளி, கடந்த நான்கு நாட்கள் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தியது. கபடி, கேரம் உள்ளிட்ட போட்டிகளில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி இறுதிப் போட்டியில், புனித மைக்கேல்ஸ் பள்ளி அணியும், ஹோலி பேமிலி பள்ளி அணியும் மோதின. மைகேல்ஸ் பள்ளி அணி, 36-22 என்ற புள்ளி கணக்கில், வெற்றி பெற்றது.
தொடர்ந்து, 17 வயதுக்குட்பட்டோருக்கான(தனி நபர்) கேரம் போட்டியில், மைக்கேல்ஸ் பள்ளி அணி முதலிடத்தையும், ஒக்கிலியர்காலனி மாநகராட்சி பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
இரட்டையர் பிரிவில், ஒக்கிலியர்காலனி மாநகராட்சி பள்ளி முதலிடத்தையும், மைக்கேல்ஸ் பள்ளி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
கால்பந்து போட்டியில், நேரு மகா வித்யாலயா பள்ளி அணி, 3-2 என்ற புள்ளிகளில் தேவாங்க பள்ளி அணியை வென்று, முதலிடம் பிடித்தது.
19 வயதுக்குட்டோர் கேரம் போட்டியில், நேரு வித்யாலயா பள்ளி அணி முதலிடத்தையும், ஒக்கிலியர்காலனி மாநகராட்சி பள்ளி அணி, இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.