ADDED : டிச 03, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வேளாண் பல்கலையில், தமிழக அரசு சார்பில், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், ஒரு மாத கால நுண்ணீர்ப் பாசன தொழில்நுட்ப வல்லுனர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது.
25 வேளாண் பட்டதாரிகளுக்கு, நுண்ணீர்ப்பாசனத்துக்கு ஏற்ற பம்ப் தேர்வு, பம்ப் இயக்கம், பழுதுநீக்கம், மின் சிக்கனத்துக்கான பம்ப் ஒருங்கிணைப்பு நுட்பங்கள், நுண்ணீர்ப்பாசன அமைப்புகளில் பம்ப்களின் பயன்பாட்டுத் திறன்கள் உள்ளிட்டவை குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.
நுண்ணீர்ப்பாசன தொழில்நுட்பங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழிற்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் தொழில்நுட்ப திறன்களை உருவாக்கல் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு, இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

