/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார்த்திகை தீபம் ஏற்ற வந்தது அழைப்பு
/
கார்த்திகை தீபம் ஏற்ற வந்தது அழைப்பு
ADDED : டிச 03, 2025 06:38 AM
கோவை: பேரூர் படித்துறையை துாய்மைப்படுத்தி தீப ஒளியேற்ற, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆண்டுதோறும், கார்த்திகை தீபத் திருநாளன்று பேரூர் படித்துறை சுத்தம் செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றி கொண்டாடப்படும். கார்த்திகை தீபத் திருநாள் முன்னிட்டு, பேரூர் படித்துறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றும் நிகழ்வு நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, பேரூர் படித்துறையை சுத்தம் செய்ய, அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேரூர் படித்துறையில் காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை களப்பணி நடக்க உள்ளது. தீபமேற்றும் நிகழ்வு மாலை 5:00 முதல், மாலை 6:30 மணி வரை நடக்கிறது. இதில் அனைவரும் பங்கேற்கலாம். விவரங்களுக்கு, 80157 14790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

