sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நாட்டின் சீரான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்: சி.ஐ.ஐ. கருத்தரங்கில் மத்திய அமைச்சர் பேச்சு

/

 நாட்டின் சீரான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்: சி.ஐ.ஐ. கருத்தரங்கில் மத்திய அமைச்சர் பேச்சு

 நாட்டின் சீரான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்: சி.ஐ.ஐ. கருத்தரங்கில் மத்திய அமைச்சர் பேச்சு

 நாட்டின் சீரான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்: சி.ஐ.ஐ. கருத்தரங்கில் மத்திய அமைச்சர் பேச்சு


ADDED : ஜன 24, 2026 07:12 AM

Google News

ADDED : ஜன 24, 2026 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: “புலம் பெயர்ந்த தொழிலாளர்களே நாட்டின் வளர்ச்சி பாதைக்கு வழி வகுக்கின்றனர்; அவர்களது பொருளாதாரமும் மேம்பட்டு வருகிறது,” என, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலியில் பேசினார்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் திறன் குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. சி.ஐ.ஐ.,கிராமப்புற மேம்பாடு, புலம்பெயர்ந்த தொழிலாளர் நலன் பிரிவு தேசிய தலைவர் சங்கர் வாணவராயர் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியை காணொலி வாயிலாக துவக்கி வைத்து, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில்,” புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டில் சமச்சீரான தொழில் துறையை உருவாக்குகின்றனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதைக்கு வழி வகுக்கின்றனர். அவர்களது பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொள்கின்றனர். ஒரே நாடு; ஒரே ரேஷன்கார்டு இணையத்தளத்தால் சமுதாய பாதுகாப்பு திட்டங்களில் பங்கேற்கின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த இன்னும் பல பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது,” என்றார்.

பாரதிய மஸ்துார் சங்கத்தின் முன்னாள் தலைவர் சஜி நாராயணன் பேசுகையில்,” புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிமைகள் சமச்சீராக இல்லை. தொழிலாளர்கள் சட்டத்தை சர்வதேசமயமாக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் பதிவு சான்றும், நியமன ஆணையையும் வழங்க வேண்டும்,” என்றார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் (டிக்) தலைவர் குமார் ஜெயந்த் பேசுகையில்,” புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வரையறைகள் இல்லை. அனைத்து உரிமைகளையும் ஆன்லைன் வழியாக சரி பார்க்க முடியும். தொழில்நுட்ப காலத்தில், இன்னும் பல ஆவணங்கள் காகிதமாகவே உள்ளன. பிறப்பிடத்திலிருந்து வசிப்பிடம் வரை மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இவற்றுக்காக தொடர்ந்து அரசு அலுவலகங்களுக்கு சென்று வர வேண்டியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தால் எங்கிருந்தும், எப்போதும் எதையும் பெற வேண்டிய நிலை ஏற்பட வேண்டும்,” என்றார்.

நிகழ்ச்சியில், எம்.எஸ்.எம்.இ. அமைச்சகத்தின் துணை டைரக்டர் ஜெனரல் அனுஜா பாப்பட், சர்வதேச குடியேற்ற அமைப்பின் முன்னாள் தலைவர் சஞ்சாய் அஸ்வதி உள்ளிட்டோர் பேசினர். சி.ஐ.ஐ., அமைப்பின் கோவை கிளை தலைவர் தேவராஜ் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us