/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் கைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு களமிறங்கி விட்டனர் 'ஸ்மார்ட் காக்கீஸ்'
/
போலீஸ் கைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு களமிறங்கி விட்டனர் 'ஸ்மார்ட் காக்கீஸ்'
போலீஸ் கைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு களமிறங்கி விட்டனர் 'ஸ்மார்ட் காக்கீஸ்'
போலீஸ் கைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு களமிறங்கி விட்டனர் 'ஸ்மார்ட் காக்கீஸ்'
ADDED : டிச 31, 2025 05:12 AM

மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, ஸ்மார்ட் காக்கீஸ் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அண்மையில் திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி ஒருவரை, கஞ்சா போதையில் இருந்த தமிழக சிறுவர்கள் கொடூரமாக தாக்கினர்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில், புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில் போலீசார் ரோந்தை அதிகப்படுத்தி உள்ளனர்.
மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் கூறுகையில், புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
சட்டத்திற்கு புறம்பாக தமிழகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புலம்பெயர் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி; யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
யாரும் அச்சப்படத் தேவையில்லை. பொது இடங்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் இடங்கள் உள்ளிட்டவற்றில், 'ஸ்மார்ட் காக்கீஸ்' வாயிலாக ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம்.
யாருக்காவது ஆபத்து நேர்ந்தால், உடனடியாக 100க்கு போன் செய்தால் போதும்; சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விடுவோம், என்றார்.

