/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் மிலாது நபி விழா
/
மேட்டுப்பாளையத்தில் மிலாது நபி விழா
ADDED : செப் 05, 2025 10:13 PM

மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் மிலாது நபி விழாவை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், 58ம் ஆண்டு நபி புகழ் பாடும் ஊர்வலம் நடந்தது. பெரிய பள்ளிவாசல் முன்பு இருந்து ஊர்வலம் தொடங்கியது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அய்யூப் தலைமை வகித்தார். ஐக்கிய ஜமாத் பேரவை தலைவர் முகமது ஷெரீப் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
மேட்டுப்பாளையம் நகரில் உள்ள 60க்கும் மேற்பட்ட மதரஸா பள்ளிகளை சேர்ந்த, ஏராளமான மாணவ, மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு தி.மு.க., மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பின் சார்பில், தண்ணீர் பாட்டில், பழங்கள், ஜூஸ் ஆகிவற்றை வழங்கினர்.
ஊர்வலத்தில் காட்டூர் பள்ளிவாசல் இமாம் இலியாஸ் பாகவி, ஐக்கிய ஜமாத் பேரவை செயலாளர் அக்பர் அலி, நகரத் தலைவர் முகைதீன் சிராஜி உள்பட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், மதரஸா பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
ஊர்வலம் பெரிய பள்ளிவாசல் அருகே தொடங்கி, ஊட்டி சாலை, பஸ் ஸ்டாண்ட், அண்ணாஜி ராவ் சாலை, சிறுமுகை சாலை வழியாக மீண்டும் பெரிய பள்ளிவாசல் மிலாது திடலை அடைந்தது.