/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊக்கத்தொகை கிடைக்காமல் தவிக்கும் பால் உற்பத்தியாளர்கள்
/
ஊக்கத்தொகை கிடைக்காமல் தவிக்கும் பால் உற்பத்தியாளர்கள்
ஊக்கத்தொகை கிடைக்காமல் தவிக்கும் பால் உற்பத்தியாளர்கள்
ஊக்கத்தொகை கிடைக்காமல் தவிக்கும் பால் உற்பத்தியாளர்கள்
ADDED : ஏப் 19, 2025 03:13 AM
அன்னுார்: தீவன விலை உயர்வு, தொழிலாளி சம்பள உயர்வு ஆகியவற்றால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும், என பால் உற்பத்தியாளர்கள் நீண்ட நாட்களாக கோரி வந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு ஆவினுக்கு வழங்கப்படும் பாலுக்கு, ஊக்கத்தொகையாக, ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் வழங்கப்படும் என கடந்த ஆண்டு அறிவித்தது. 10 நாட்களுக்கு ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'முன்பு பத்து நாட்களுக்கு ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தற்போது மாதம் ஒரு முறை என மாற்றினர்.
மார்ச் மாதம் ஆவினுக்கு வழங்கிய பாலுக்கான ஊக்கத்தொகை ஏப். 18ம் தேதி ஆகியும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் மூன்று மாதங்களுக்கு முன், கூடுதலாக ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்து இரண்டு மாதங்கள் வழங்கினர். அந்த ஊக்கத் தொகையும் கடந்த மாதம் கிடைக்கவில்லை.
தீவன விலை உயர்ந்துள்ளது. பால் சுரப்பது குறைந்துள்ளது. இந்நிலையில் ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடிப்பதால் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். உடனடியாக ஊக்கத்தொகையை ஆவின் நிர்வாகம் வழங்க வேண்டும்,' என்றனர்.

