ADDED : ஜன 07, 2026 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர்: சூ லூர் ரயில்வே பீடர் ரோட்டில் இருந்து ராவத்தூருக்கு செல்ல, மூன்று கி.மீ.,ரோடு உள்ளது. இந்த ரோட்டை ராவத்தூர் மக்கள், கார்களில் நீலம்பூர் பை பாஸ் ரோடு மற்றும் கோவை செல்லும் மக்கள் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு செல்லும் டேங்கர்
லாரிகள் இந்த ரோட்டில் இயக்கப்படுகின்றன. நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோடு புதுப்பிக்கும் பணிகள் துவங்கின. முதல் கட்டமாக, ராவத்தூர் ரயில்வே பாலம் வரை ரோடு முழுக்க 'மில்லிங்' செய்யப்பட்டது. அப்பணி முடிந்து பல நாட்கள் ஆகியும் ரோடு போடும் பணி துவங்கவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். உடனடியாக ரோடு போடும் பணியை செய்து முடிக்க, அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

