ADDED : ஏப் 02, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுாரில், மனவளக்கலை யோகா வகுப்பு துவங்குகிறது.
அன்னுார் அ.மு. காலனியில், மனவளக்கலை மன்றம் செயல்படுகிறது. இங்கு வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த, முழுமை நல வாழ்வுக்கு மனவளக்கலை யோகா என்னும், 12 நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு துவங்குகிறது.
மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, அறிமுக வகுப்பு நடக்கிறது. வகுப்பில் எளிய முறை உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம் ஆகியவை கற்பிக்கப்படும். பயிற்சி வாயிலாக, மன அமைதி பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்க்கையில் தெளிவு ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக வகுப்பு இலவசம்.
விபரங்களுக்கு: 97899 88949, 94424 56862.
