/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனிமவளம் கடத்தல் புகார்; அறிக்கை தர கலெக்டர் உத்தரவு
/
கனிமவளம் கடத்தல் புகார்; அறிக்கை தர கலெக்டர் உத்தரவு
கனிமவளம் கடத்தல் புகார்; அறிக்கை தர கலெக்டர் உத்தரவு
கனிமவளம் கடத்தல் புகார்; அறிக்கை தர கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 14, 2025 08:53 PM
அன்னுார்; கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் பிறப்பித்த உத்தரவில், 'கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை கடிதத்தின்படி, அனுமதி இன்றி, கனிமம் எடுப்பது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இப்புகார்கள் குறித்து தாலுகா அளவிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,' என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அன்னுார் தாசில்தார் வருகிற 18ம் தேதி மாலை 4:00 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் தாலுகா அளவிலான கண்காணிப்பு குழுவின் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாலுகா அளவிலான கண்காணிப்பு குழுவில் உள்ள உறுப்பினர்கள் நடவடிக்கை குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தாசில்தார் யமுனா அறிவுறுத்தி உள்ளார்.
இக்கூட்டத்திற்கு துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

