/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மினி நேஷனல் ரோல்பால் கோவை வீரர்கள் அசத்தல்
/
மினி நேஷனல் ரோல்பால் கோவை வீரர்கள் அசத்தல்
ADDED : பிப் 05, 2025 11:51 PM

கோவை: அசாம் மாநிலத்தில் நடந்த, 'மினி நேஷனல் ரோல்பால் சாம்பியன்ஷிப்' போட்டியில், கோவை அணி வீரர், வீராங்கனைகள் அபாரமாக விளையாடினர்.
அசாம் மாநிலம், கவுகாத்தியில், 14வது 'மினி நேஷனல் ரோல்பால் சாம்பியன்ஷிப் 2024-25' போட்டி நான்கு நாட்கள் நடந்தது. இதில், தமிழக அணிக்காக விளையாடிய வீரர், வீராங்கனைகள் அசத்தல் திறமையை வெளிப்படுத்தினர்.
காலிறுதி போட்டியில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணி வீரர்கள், 5-3 என்ற கோல் கணக்கில், ராஜஸ்தான் அணியை வீழ்த்தினர். அரையிறுதி போட்டியில் அசாம் அணியுடன், தமிழக அணி வீரர்கள் மோதினர். கடுமையாக போராடிய வீரர்கள், 2-7 என்ற கோல் கணக்கில், வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
அதேபோல், தமிழக அணி வீராங்கனைகள் காலிறுதியில் ஒடிசா அணியை, 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அரையிறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியுடன், 3-5 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தது. வீரர், வீராங்கனை என இரு அணிகளும், வெண்கல பதக்கங்கள் வென்றன.
கோவையை சேர்ந்த லியா கார்த்திக், ஹர்னிகா, சாஸ்திகா, அதிதி, தன்வி ஆகியோரும், வீரர்கள் அணியில் ஹர்சீத் ஆகியோரும், அபாரமாக விளையாடினர். இவர்களை, தமிழ்நாடு மற்றும் கோவை மாவட்ட ரோல்பால் சங்க நிர்வாகிகள் வாழ்த்தினர்.