ADDED : ஜூன் 03, 2025 01:14 AM

கருமத்தம்பட்டி, ; கருமத்தம்பட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி வேன் தீப்பிடித்து எரிந்து நாசமாகியது.
கணியூர் ஊராட்சி ஷீபா நகரை சேர்ந்தவர் சுஜித் குமார், 31. இவருக்கு சொந்தமான மினி வேன் கருமத்தம்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை,, 5:15 மணிக்கு வேனில் இருந்து கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து வேன் முழுக்க தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அருகில் இருந்த போர்வெல் லாரியில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர்.
பெட்ரோல் பங்க் அருகில் மினி வேன் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம்பரபரப்பு ஏற்பட்டது. கருமத்தம்பட்டி போலீசார் தீ விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.