தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குறைந்தபட்ச கூலி வழங்கணும்; இ.கம்யூ., மாநாட்டில் தீர்மானம்

குறைந்தபட்ச கூலி வழங்கணும்; இ.கம்யூ., மாநாட்டில் தீர்மானம்

குறைந்தபட்ச கூலி வழங்கணும்; இ.கம்யூ., மாநாட்டில் தீர்மானம்


ADDED : ஜூலை 02, 2025 09:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2025 09:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை; தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்சக்கூலி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, இ.கம்யூ., மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வால்பாறை தாலுகா இ.கம்யூ., கட்சியின், 27வது மாநாடு ஏ.ஐ.டி.யு.சி., தியாகிகள் இல்லத்தில் நடந்தது. மாநாட்டுக்கு தாலுகா செயலாளர் மோகன் தலைமை வகித்தார். இதில் மாநில பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் அண்ணாதுரை வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பணி ஓய்வு பெறும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வீடு கட்ட வசதியாக தலா 3 சென்ட் இடம் வழங்க வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்சக்கூலி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன விலங்கு - மனித மோதலை தடுக்க தமிழக அரசும், வனத்துறையும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்க்கொள்ள வேண்டும். எஸ்டேட் பகுதியில் பழுதடைந்துள்ள ரோடுகளை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும்.

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்ய வசதியாக, வால்பாறையிலிருந்து வாட்டர்பால்ஸ், அட்டகட்டி வரை அரசு பஸ் இயக்க வேண்டும். இவை உள்ளிட்ட, 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us