/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்லுார் அணையில் அமைச்சர் ஆய்வு
/
பில்லுார் அணையில் அமைச்சர் ஆய்வு
ADDED : ஆக 21, 2025 09:35 PM

மேட்டுப்பாளையம்; கோவை காரமடை அருகே உள்ள பில்லுார் அணையை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம், பில்லுார் முதலாவது குடிநீர் திட்டத்தின் இயக்குதல் மற்றும் பராமரித்தல் விபரங்கள், அணையை துார்வாருதல், ஆகியவை குறித்து கேட்டறிந்தார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்களுக்கு பில்லுார் அணையிலிருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவு உள்ளிட்ட விபரங்கள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அணையை துார்வாரினால், மணல் கொட்டுவதற்கு வனத்துறை மற்றும் விவசாய நிலங்களை விரைவில் கண்டறிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனீஷ் நாரணவரே, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மண்டல இணை இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) ராஜாராம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்வகுமார், நிர்வாகப் பொறியாளர் பட்டன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.----