ADDED : பிப் 15, 2025 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்யப்படும் வளர்ச்சி பணிகள் மற்றும் சிறப்பு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த ஆய்வு கூட்டம், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில், 20ம் தேதி (வியாழன்) நடக்கிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளுடன், கலந்தாய்வு கூட்டம் நடத்துகிறார். வளர்ச்சி பணிகளை வேகப்படுத்தவும், முடங்கியுள்ள திட்டங்களுக்கு புத்துயிர் ஊட்டவும், முடிந்த பணிகளை துவக்கி வைக்கவும் திட்டமிட்டு இருப்பதாக, நகராட்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

