வெள்ளலுார் குப்பை கிடங்கில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு
வெள்ளலுார் குப்பை கிடங்கில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு
ADDED : ஜூன் 15, 2026 11:28 PM

அ நிறம் | அளவு
கோவை: மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை, 24x7 குடிநீர் விநியோகத்துக்கான சூயஸ் நிறுவனத்தின் பணி மற்றும் வெள்ளலூர் குப்பை கிடங்கை அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்தார்.
ஏ.கே.எஸ்.நகர் பகுதியில் சூயஸ் குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்த சம்பத்குமார் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வடவள்ளி ராஜன் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட வேலைகளை பார்த்தார்.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கையும் பார்வையிட்டார். உரக்கிடங்கு வளாகத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை விரைந்து உரமாக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
