ஜி.எச்.ல் காட்சி பொருளாக பிளாஸ்டிக் சேகரிப்பு கருவி
ஜி.எச்.ல் காட்சி பொருளாக பிளாஸ்டிக் சேகரிப்பு கருவி
ADDED : ஜூன் 15, 2026 11:28 PM

கோவை: அரசு மருத்துவமனையில், ஸ்கேன் மையம் உள்ள பழைய கட்டடத்தின் தரைத்தளம், குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு முன் மற்றும் பின்புறம் என, மூன்று இடங்களில், பிளாஸ்டிக் பாட்டிலை துகள்களாக்கும் கருவி உள்ளது. இத்துகள்கள் ரோடு போடும் பணிக்கு பயன்படுத்தப்படும். தன்னார்வ அமைப்பு சார்பில் வைக்கப்பட்டுள்ளது. கருவிகள் வைக்கப்பட்டது முதல் தற்போது வரை பிளாஸ்டிக் துகள்கள் எடுக்கப்படவில்லை.
குழந்தைகள் அறுவை சிகிச்சை கட்டடத்தின் முன் வைக்கப்பட்ட கருவி அருகே, நேற்று காலி குளுக்கோஸ் பாட்டில்களும் கிடந்தன. மருத்துவமனை முழுவதும் ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில்,'தன்னார்வ அமைப்பு சார்பில் வைக்கப்பட்ட இக்கருவியை மீண்டும் பழுது நீக்க, குப்பைகளை அகற்ற யாரும் வரவில்லை. நிறுவனத்துக்கு தொடர்பு கொண்ட போதும் பதிலில்லை. கருவிகளை அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது,' என்றனர்.
