/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணின் காரை போதையில் வழிமறித்து கண்ணாடி உடைப்பு
/
பெண்ணின் காரை போதையில் வழிமறித்து கண்ணாடி உடைப்பு
ADDED : பிப் 10, 2025 11:41 PM
கோவை; கோவை, துடியலூரை சேர்ந்தவர், 19 வயது இளம்பெண். நேற்று முன்தினம் காரில் வடவள்ளியில் இருந்து துடியலூருக்கு இடையர்பாளையம் வழியாக சென்றார். இரு வாலிபர்கள் காரில், இளம்பெண்ணின் காரை பின் தொடர்ந்து வந்தனர். கவுண்டம்பாளையம் யூனியன் ரோடு மாநகராட்சி பள்ளி அருகே வந்த போது, வாலிபர்கள் இளம்பெண் காரை திடீரென வழிமறித்தனர்.
மதுபோதையில் காரில் இருந்து இறங்கிய இரு வாலிபர்கள், இளம்பெனிடம் தகராறு செய்தனர். அவதூறாக பேசிய இருவரும், இளம்பெண்ணின் கார் கண்ணாடியை உடைத்தனர். அருகிலிருந்தவர்கள் அங்கு வந்ததால், வாலிபர்கள் காரில் ஏறி தப்பினர். காருக்கு வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இளம்பெண் புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து வாலிபர்களை தேடி வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் காரில் சென்ற இளம்பெண்களை வழிமறித்து நான்கு வாலிபர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று கோவையிலும் சம்பவம் நடந்துள்ளது.