/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி கவிதைகள்'
/
'காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி கவிதைகள்'
ADDED : ஏப் 23, 2025 11:13 PM
கோவை; புலம் தமிழ் இலக்கிய பலகை சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம், கோவை மாரண்ண கவுடர் பள்ளி அரங்கில் நடந்தது; கவிஞர் சந்திரசேகர் தலைமை வகித்தார். கவிஞர் பொன்முடி சுப்பையன் எழுதிய 'தியாகம் விளைந்த செம்புலம்', பூவரசி மறைமலை எழுதிய 'தொடுவானம்' ஆகிய நுால்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நுால்கள் குறித்து எழுத்தாளர் மனோசக்தி மாசிலாமணி, பேராசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் கருத்துரை வழங்கினர். தொடர்ந்து சிறப்பு கவியரங்கம் நடந்தது.
பேராசிரியர் வசந்தி மாலா பேசுகையில், ''கவிதை என்பது சங்க காலத்தில் அகம் சார்ந்தும், புறம் சார்ந்தும் படைக்கப்பட்டது. அந்தக்காலத்தில் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்க்கை அதில் வெளிப்பட்டது. காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக கவிதைகள் உள்ளன. கவிதைகளை நாம் வாசிக்கும்போது, காலத்தை பிரதிபலிப்பதை உணர முடியும்,'' என்றார்.
கவிஞர் ரவிந்திரன், புலவர் அப்பாவு, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராசு உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.