/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகளுக்கு கலப்பு தீவனம்; ஆனைமலையில் வினியோகம்
/
கால்நடைகளுக்கு கலப்பு தீவனம்; ஆனைமலையில் வினியோகம்
கால்நடைகளுக்கு கலப்பு தீவனம்; ஆனைமலையில் வினியோகம்
கால்நடைகளுக்கு கலப்பு தீவனம்; ஆனைமலையில் வினியோகம்
ADDED : ஆக 24, 2025 11:42 PM
பொள்ளாச்சி; தாயுமானவர் திட்டத்தில், ஆனைமலை ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தகுதியான, 100 பயனாளிகளுக்கு கலப்பு தீவனம் மற்றும் தாது உப்பு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், தாயுமானவர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட, 100 ஊராட்சி ஒன்றியங்களில், கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, சினைப்பருவ கறவை பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்து மற்றும் சமச்சீர் கலப்புத் தீவனம் வழங்கப்படுகிறது. ஆனைமலை ஒன்றியத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதில், சினையுள்ள கறவை பசுக்கள், ஆவின் உறுப்பினர்கள் என, 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் வாயிலாக, கலப்பு தீவனம் மற்றும் தாது உப்பு வழங்கப்பட்டும் வருகிறது.
கால்நடைத்துறையினர் கூறியதாவது:
தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு, கலப்பு தீவனம், ஒரு நாளைக்கு 3 கிலோ வீதம், 4 மாதங்களுக்கு 120 கிலோ; தாது உப்பு ஒரு நாளைக்கு 30 கிராம் வீதம் 4 மாதங்களுக்கு 4 கிலோ வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் வாயிலாக, பசுக்கள் மற்றும் கன்றுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பால் உற்பத்தியை பெருக்க உதவுகிறது. மேலும், ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.
இதுதவிர, பிற ஒன்றியங்களில், பயனாளிகள் தேவைக்கு ஏற்ப புல்நறுக்கும் கருவி, பண்ணை அமைக்க, 250 கோழி குஞ்சுகள் வீதம் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு, கூறினர்.

