/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய குடிநீர் தொட்டி கட்ட எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு
/
புதிய குடிநீர் தொட்டி கட்ட எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு
புதிய குடிநீர் தொட்டி கட்ட எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு
புதிய குடிநீர் தொட்டி கட்ட எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு
ADDED : டிச 20, 2025 08:58 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆதியூர் அரசுப்பள்ளியில், பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்ட, 13 லட்சம் ரூபாய் தொகுதி நிதி வழங்கும் உத்தரவை எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் வழங்கினார்.
பொள்ளாச்சி அருகே, புரவிபாளையம் ஊராட்சி ஆதியூரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு அபாயகரமாக இடிந்து விழும் நிலையில் குடிநீர் மேல்நிலைத்தொட்டி இருந்தது.
குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாமல் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றி புதியதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், பள்ளி வளாகத்துக்கு சென்று, குடிநீர் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, புதிய நீர் தேக்க தொட்டி கட்ட, எம்.எல்.ஏ. தொகுதி நிதி, 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்கான உத்தரவை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் வழங்கினார். ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

