தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளிக்கு இருக்கை எம்.எல்.ஏ., உறுதி

 பள்ளிக்கு இருக்கை எம்.எல்.ஏ., உறுதி

 பள்ளிக்கு இருக்கை எம்.எல்.ஏ., உறுதி


ADDED : ஜூலை 03, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 04:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், பொள்ளாச்சி அறம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சை அளித்தனர்.

இலவச மருத்துவ முகாமை எம்.எல்.ஏ., சுதாகர் துவக்கி வைத்து பேசும் போது, ''மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள், மருத்துவ காப்பீடு திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். மாணவர்கள் நலன் கருதி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கூடுதல் இருக்கைகள் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்துதரப்படும்,'' என்றார்.

நிகழ்ச்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன், நகராட்சி கவுன்சிலர்கள் பாஸ்கர், மகுடீஸ்வரன் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us