/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உபரிநீரை குளங்களுக்கு வழங்க கலெக்டருக்கு எம்.எல்.ஏ., கடிதம்
/
உபரிநீரை குளங்களுக்கு வழங்க கலெக்டருக்கு எம்.எல்.ஏ., கடிதம்
உபரிநீரை குளங்களுக்கு வழங்க கலெக்டருக்கு எம்.எல்.ஏ., கடிதம்
உபரிநீரை குளங்களுக்கு வழங்க கலெக்டருக்கு எம்.எல்.ஏ., கடிதம்
ADDED : நவ 01, 2024 10:09 PM
பொள்ளாச்சி ; மழை காலங்களில் வீணாகும் உபரிநீரை, குளம், குட்டைகளுக்கு வழங்க வேண்டுமென, கோவை மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ., கடிதம் அனுப்பி வலியுறுத்தினார்.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாருக்கு கடிதம் அனுப்பினார்.
அதில் கூறியிருப்பதாவது:
கடந்த, 2015ம் ஆண்டு, பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட கோதவாடி, தேவம்பாடி குளங்கள், மழை காலங்களில், அணைகளின் உபரிநீர் வரத்து கால்வாய்கள் வாயிலாக திறக்கப்பட்டு நிரப்பப்பட்டன.
இதனால், குளங்களின் பாசன பரப்பில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது, கனமழை பெய்துள்ளதால், இந்த இரண்டு குளங்களுக்கும் நீர்வரத்து உள்ள கால்வாய்களை, வேலை உறுதி திட்டத்தில் துார்வாரி, அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து நிரப்ப வேண்டும்.
மேலும், மழை காலங்களில் ஆற்றில் திறந்து விடப்படும் உபரிநீரை, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள குளங்களுக்கு, கால்வாய்கள் வாயிலாக தண்ணீர் திறந்து விட்டு நிரப்பினால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால், ஆறு மாதங்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படாது. அதனால், இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.