/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனித - வனவிலங்கு மோதலை தடுக்க அரசுத்துறைகள் நடவடிக்கை அவசியம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
மனித - வனவிலங்கு மோதலை தடுக்க அரசுத்துறைகள் நடவடிக்கை அவசியம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
மனித - வனவிலங்கு மோதலை தடுக்க அரசுத்துறைகள் நடவடிக்கை அவசியம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
மனித - வனவிலங்கு மோதலை தடுக்க அரசுத்துறைகள் நடவடிக்கை அவசியம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஆக 18, 2025 09:12 PM
பொள்ளாச்சி; 'மனித- வனவிலங்கு மோதலை தடுக்க அரசுத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் அறிக் கை:
வால்பாறையில் சில நாட்களுக்கு முன், மானாம்பள்ளியில், நான்கு வயது சிறுமியை தாயின் கண் முன்னே, சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.
மளுக்குப்பாறையில் வீட்டுக்குள் புகுந்து, 4வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்விச் செல்ல முயன்றது.
சமீபத்தில் வேவர்லி எஸ்டேட் பகுதியில் கடைக்கு சென்று வந்த சிறுவனை, புதருக்குள் பதுங்கியிருந்த கரடி கடித்து கொன்றது. இச்சம்பவங்கள், அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
ச மீபகாலமாக குடியிருப்பு பகுதிகளின் அருகே வனவிலங்குகள் நடமாடுவதால், மனித - வனவிலங்குகள் மோதல்கள் அதிகரித்து வருகிறது. தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்று, பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அதிகாரிகளின் கடமையாகும்.வனத்துறை, வருவாய்துறை, காவல்துறை இணைந்து தீர்வு காண வேண்டும்.
குடியிருப்பு பகுதிகளின் அருகே தடுப்பு வேலி அமைத்தோ, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியோ வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.
வனத்திலேயே தண்ணீர், உணவு தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு கூடுதல் நிதியை வனத்துறைக்கு ஒதுக்கீடு செய்து, வனப்பகுதிகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். மனித - வனவிலங்கு மோதல்களை தடுப்பதற்கும், வனவிலங்கு வாழ்விடங்களை பாதுகாப்பதற்கும், பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியை அரசு ஏற்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
சமவெளியில், மயில்கள், காட்டுப்பன்றிகள் விளைபயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, வனத்துறை, மயில்கள், காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை காக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளோடு இணைந்து போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.