/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி; தீவிரப்படுத்த எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி; தீவிரப்படுத்த எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி; தீவிரப்படுத்த எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி; தீவிரப்படுத்த எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஆக 05, 2025 11:33 PM

பொள்ளாச்சி; ''கூட்டணி கட்சிகளுடன் ஒன்றிணைந்து வாக்காளர் பட்டியல்களை சரிபார்க்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்,'' என, பொள்ளாச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் அ.தி.மு.க., - பா.ஜ., - த.மா.கா., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் முத்து கருப்பண்ணசாமி, சக்திவேல், பாப்பு என்கிற திருஞானசம்பந்தம், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
கூட்டணி கட்சிகளுடன் ஒன்றிணைந்து வாக்காளர் பட்டியல்களை சரிபார்க்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தினமும், இரண்டு மணி நேரம் இப்பணிக்காக ஒதுக்கினால் போதுமானது.
மீண்டும் தமிழக முதல்வராக பழனிசாமிய ை ஆக்க, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். தற்போதுள்ள ஒற்றுமை தொடர வேண்டும்.
தி.மு.க.,வினர் ஓட்டுக்கு பணம் அதிகமாக கொடுப்பர்; மக்கள் பணத்தை வாங்கினாலும் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடும் மனநிலைக்கு மாற்ற வேண்டும். தினமும் அவர்களை சந்திக்கும் போது, மனநிலை மாறும்.
வேட்பாளர் யார் என்பதெல்லாம் பொதுச் செயலாளர் அறிவிப்பார். யாராக இருந்தாலும் அவர்களை வெற்றி பெற நாம் பாடுபட வேண்டும். மக்கள் மனதில் நாம் இடம் பெற வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு, துண்டு பிரசுரமாக மக்களிடம் வழங்கி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அதிக ஓட்டுக்கள் நகரத்தில் பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரகுபதி, அ.தி.மு.க., நிர்வாகிகள் அருணாச்சலம், கனகராஜ், பா.ஜ., மாவட்ட தலைவர் சந்திரசேகர், மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் துரை, நகர தலைவர் கோகுல் குமார், த.மா.கா., மாவட்ட தலைவர் குணசேகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

