sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கர்நாடக இசை மேதைகளில் முக்கியமானவர் எம்.எல்.வி.,

/

கர்நாடக இசை மேதைகளில் முக்கியமானவர் எம்.எல்.வி.,

கர்நாடக இசை மேதைகளில் முக்கியமானவர் எம்.எல்.வி.,

கர்நாடக இசை மேதைகளில் முக்கியமானவர் எம்.எல்.வி.,


ADDED : நவ 12, 2024 05:48 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 1928ம் ஆண்டு, ஜூலை 3ம் தேதி பிறந்தவர் வசந்தகுமாரி. பெற்றோர், இசைக்கலைஞர்களான அய்யாசாமி ஐயர் - லலிதாங்கி. ஆண் பாடகர்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், எல்லைகளை தாண்டி சாதித்த பெண் பாடகர்களில் இவரும் ஒருவர். இவரும், டி.கே.பட்டம்மாள், எம்.எஸ்., சுப்புலட்சுமி ஆகியோரும், கர்நாடக இசையின் மேதைகளாக அறியப்பட்டனர்.

இவர், பாடகர் ஜி.என்.பாலசுப்ரமணியத்திடம் முறையாக பயிற்சி பெற்றார். இளம் வயதில், இயற்கையாகவே ஒரு அற்புதமான இசை சூழலில் வளர்ந்தார். தனது 11வது வயதில் இருந்து தனது தாயுடன் இணைந்து பாடத் தொடங்கினார். 1941ம் ஆண்டு, 13 வயதில், பெங்களூருவில் தனது முதல் தனிக்கச்சேரியை அரங்கேற்றினார்.

அன்று மாலை, பார்வையாளர்களுக்கு, மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பின், அன்பாக எம்.எல்.வி., என்றே அறியப்பட்டார். இவரது கச்சேரிகளில் புரந்தரதாசர் பாடல்களை, நேர்த்தியான குரல் வாயிலாக வழங்கியது பெரும் ஈர்ப்பாக இருந்தது.

உலகெங்கும் உள்ள இசை அமைப்புகளால் அவருக்கு பல பட்டங்கள் மற்றும் மரியாதைகள் வழங்கப்பட்டன. இவற்றில், முனைவர் பட்டம், இந்திய அரசின் பத்ம பூஷன், மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி பட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கது.இவரது நினைவு அஞ்சல் தலை, 2018ம் ஆண்டு, இந்திய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டது.

(கோவை சுகுணா திருமண மண்டபத்தில், இன்றும், நாளையும் தபால் தலை சேகரிப்பு கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்)






      Dinamalar
      Follow us