தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மொபைல் போனுக்கு தடை உத்தரவு அமலுக்கு வந்தது

மொபைல் போனுக்கு தடை உத்தரவு அமலுக்கு வந்தது

மொபைல் போனுக்கு தடை உத்தரவு அமலுக்கு வந்தது


ADDED : செப் 01, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்குள், பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல, தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ள, இந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட, முதுநிலை கோவில்களுக்குள், பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல, தமிழக அரசு தடை விதித்து இருந்தது. இந்த சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், மொபைல் போன் பாதுகாப்பு மையம், ராஜகோபுரம் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் மொபைல் போன் கொண்டு வந்த பக்தர்களிடம், கோவில் பணியாளர்கள் போனை வாங்கி வைத்துக் கொண்டு, டோக்கன் கொடுத்தனர். போனை பாதுகாப்பு மையத்தில் வைத்தனர். இதற்கு கட்டணமாக ஐந்து ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் சரவணன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us