/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல்போன் பறிப்பு; ஒருவர் சிறையில் அடைப்பு
/
மொபைல்போன் பறிப்பு; ஒருவர் சிறையில் அடைப்பு
ADDED : ஜூலை 13, 2025 11:39 PM
கோவை; கோவை சிங்காநல்லுார் தனலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் முகுந்த், 42. கடந்த, 11 ம் தேதி இவரது மகள், வீட்டின் அருகில் உள்ள காலியிடத்தில் இருந்த மயில்களை, மொபைல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் சிறுமியிடம், 'நான் வீடியோ எடுத்துத் தருகிறேன், மொபைல்போனை கொடு' என கேட்டார். சிறுமி மறுத்த நிலையில், மொபைல்போனை பறித்துக் கொண்டு அந்நபர் தப்பினார்.
சிறுமியின் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் அந்நபரை துரத்தி சென்றனர். ஆனால், அந்நபர் தப்பினார். முகுந்த் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த சிங்காநல்லுார் போலீசார் விசாரித்தனர்.
மொபைல்போனை பறித்து தப்பியது, அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி, 36 எனத் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். மொபைல்போன் மீட்கப்பட்டது.

