/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல் போன் பறிப்பு; ஒருவர் சிறையில் அடைப்பு
/
மொபைல் போன் பறிப்பு; ஒருவர் சிறையில் அடைப்பு
ADDED : அக் 12, 2025 11:50 PM
கோவை:மொபைல்போனை பறித்துச் சென்றவரை, போலீசார் சிறையில் அடைத்தனர். மற்றொரு சிறுவனை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் குண்டலி, ஜமதாராவை சேர்ந்தவர் சாகர் ராய், 19. கோவை சங்கனுார் லட்சுமி நகரில் தங்கி, அங்குள்ள இரும்பு கடையில் பணிபுரிகிறார். 9ம் தேதி கோவை நல்லாம்பாளையம் ரோட்டில், தனது தாயிடம் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார். அவ்வழியாக வந்த இருவர், சாகர் ராயின் மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.
கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த காவியசெல்வன், 19 மற்றும், 17 வயது சிறுவன் ஒருவன் மொபைல்போனை திருடியது தெரிந்தது. காவியசெல்வனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், சிறுவனை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பினர்.