/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல்போன் ஆர்டர் ரத்து; இழப்பீடு வழங்க உத்தரவு
/
மொபைல்போன் ஆர்டர் ரத்து; இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : நவ 18, 2024 09:44 PM
கோவை ; மொபைல் போன் ஆர்டர் கொடுத்தும் டெலிவரி செய்யாததால், இழப்பீடு வழங்க அமேசான் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
கோவை அருகேயுள்ள பட்டணம், டிரினிட்டி நகைர சேர்ந்த செஞ்சித், 'ஒன்பிளஸ்' மாடல் மொபைல் போன் வாங்குவதற்காக, அமேசான் ஆன்லைன் விற்பனை நிறுவனம் வாயிலாக கடந்த 2024, மார்ச், 25ல் ஆர்டர் கொடுத்தார். பழைய மொபைல் போனுக்கு 'எக்சேஞ்ச்' விலை கழித்து, 14,078 ரூபாய் செலுத்தினார். ஆர்டர் கொடுத்து பல நாட்களாகியும் மொபைல் போன் டெலிவரி செய்யப்படவில்லை. இது பற்றி கேட்ட போது, ஆர்டரை ரத்து செய்து விட்டு பணத்தை திருப்பி அனுப்பினர்.
மொபைல் போன் ஆர்டர் கொடுத்தும் குறிப்பிட்ட தேதியில் அனுப்பாமல் ஏமாற்றியதால் மன உளைச்சலுக்கு ஆளான செஞ்சித், இழப்பீடு கேட்டு கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வக்கீல் ஆர்.ராஜ்குமார் வாயிலாக வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ''அமேசான் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு 2,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.